Breaking News

சமூக மாற்றத்திற்க்கான ஊடக மைய்யத்தின் ஏற்பாட்டில் பாடசாலை பைகள் வழங்கிவைப்பு...!

 

சமூக மாற்றத்திற்க்கான ஊடக மைய்யத்தின் ஏற்பாட்டில் பாடசாலை பைகள் வழங்கிவைப்பு...!



வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூக மாற்றத்திற்க்கான ஊடக மைய்யத்தின் ஏற்பாட்டில்
ஜெர்மனியில் வசிக்கும் லஷ்மிகா அறக்கட்டளை நிறுவுனர் தர்மிகாவின் அவர்களின் நிதி உதவியில்
முல்லைத்தீவு  மாமடுச் சந்தி பழம்பாசி கற்பகா அறநெறி பாடசாலை மாணவர்கள்  70 பேருக்கு புத்தக பைகள் வழங்கும் நிகழ்வு இன்று நெடுங்கேணி பழம்பாசி கற்பகா அறநெறி பாடசாலையில் அறநெறி ஆசிரிதே தலமையில் காலை 11:00 மணியளவில் இடம் பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வரவேற்க்கப்பட்டு பஞ்ச புராண ஓதுதலுடன் நிகழ்வு ஆரம்பமானது.

இதில் சமூக மாற்றத்திற்கான ஊடக மைய்ய உறுப்பினர்களான இரத்தினசிங்கம் முரளிதரன், சி.த.காண்டீபன்,சமூக மற்றும் பெண்ணியல் செயற்பாட்டாளர் திருமதி சந்திரமதி, ஆகியோர் கலந்துகொண்டு கற்பகா அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு புத்தக பைகளை வழங்கிவைத்தனர்.

இதில் கற்பக அறநெறி பாடசாலை மாணவர்கள்,Qபெற்றோர்கள் ஆசிரியர்கள் என பலரும் கபந்துகொண்டு சிறப்பித்தனர்