பிரபல அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கத்தின் புகழுடலுக்கு ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் நேரில் சென்று அஞ்சலி...!
பிரபல அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கத்தின் புகழுடலுக்கு ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் நேரில் சென்று அஞ்சலி...!
பிரபல அரசியல் ஆய்வாளரும், மூத்த சட்டத்தரணியுமான சி.அ. யோதிலிங்கத்தின் புகழுடலுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (11.10.2026) யாழ்.குப்பிழானில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் தலைவர் சி வேந்தன் அவர்கள் கலந்து கொண்டு நேரில் உணர்வுபூர்வ மலர் அஞ்சலியும், அகவணக்கமும் செலுத்தியுள்ளனர்.
பிரபல எழுத்தாளர் யோதிலிங்கம் அவர்களின் மறைவு தமிழ் தேசிய பரப்புக்கு மாபெரும் இழப்பு எனவும் அவர் வாழ் நாள் முழுவதையும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக தனது எழுத்துக்களை தொடுத்தது மட்டுமன்றி சுய நிர்ணய உரிமையே மிக சிறந்த தீர்வு எனும் தத்துவ நோக்குடன் பயணித்த மாமனிதர் என தனது இரங்கலை தெரிவித்து சென்றுள்ளார்
