தாளையடி சந்தியில் முச்சக்கர வண்டி – வாகனம் மோதி விபத்து; மயிரிழையில் உயிர் தப்பியவர்கள்!
தாளையடி சந்தியில் முச்சக்கர வண்டி – வாகனம் மோதி விபத்து; மயிரிழையில் உயிர் தப்பியவர்கள்!
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, தாளையடி சந்திப் பகுதியில் இன்று (11) பிற்பகல் முச்சக்கர வண்டி ஒன்றும் மற்றொரு வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கட்டைக்காடு பகுதியில் இருந்து செம்பியன்பற்று வடக்கு நோக்கிப் பயணித்த வாகனமும், புதுக்காட்டுப் பகுதியில் இருந்து தாளையடி கடற்கரை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியும் தாளையடி சந்திப் பகுதியில் மோதியுள்ளன.
இதன்போது முச்சக்கர வண்டி பலத்த பொருட்சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மருதங்கேணி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மந்திகை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
