Breaking News

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் இலங்கையில் தற்போது இடம்பெறும் சில சம்பவங்களைப் புரிந்துகொள்ள முடியாதுள்ளதாகவும், அரசியலமைப்பில் உள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் காலத்திற்கேற்ப புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

 பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் இலங்கையில் தற்போது இடம்பெறும் சில சம்பவங்களைப் புரிந்துகொள்ள முடியாதுள்ளதாகவும், அரசியலமைப்பில் உள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் காலத்திற்கேற்ப புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



கம்புறுப்பிட்டிய, சபுகொட இலங்கம்கொட புராதன ரஜமஹா விகாரை உள்ளிட்ட விகாரைகளின் தலைமைப் பீடாதிபதியும், ஸ்ரீ ரோஹண பிரிவின் சிரேஷ்ட அனுநாயக்கருமான ஓமாரே கஸ்ஸப தேரரைச் சந்தித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


பௌத்த மதத்திற்கு வழங்கப்பட வேண்டிய முன்னுரிமையை உறுதிப்படுத்துவதுடன், ஏனைய மதங்களுக்கும், இனங்களுக்கும் உரிய இடமளிக்கப்பட வேண்டும் என்றும், காவியுடைக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பில் இரண்டு வாரங்கள் செலவிட்டு குழுக்களை அமைப்பதற்குப் பதிலாக, 24 மணித்தியாலங்களுக்குள் தேவையான தகவல்களைத் திரட்டி, மதத் தலைவர்களின் ஆடைகள் உள்ளிட்ட விடயங்களில் தலையிடாமல், காவியுடையின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் ஒழுங்குவிதிகளில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பான முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் காலதாமதமின்றி விரைவான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


தேரர்களின் காவியுடையை அகற்றும் நடவடிக்கை மிகவும் மோசமானது எனக் குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, அவ்வாறு செய்வதற்கு பொதுமக்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.


இந்தச் சட்ட மற்றும் ஒழுங்குவிதி மாற்றங்களை மேற்கொள்வதற்காக எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி தன்னால் இயன்ற அழுத்தங்களைத் தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


#sooriyannews #Srilanka #TruthAtAllCosts #SajithPremadasa #SJB #BuddhistMonks