யாழில் சட்டவிரோதமான மதுபான உற்பத்தி நிலையம் சுற்றி வளைப்பு!
யாழில் சட்டவிரோதமான மதுபான உற்பத்தி நிலையம் சுற்றி வளைப்பு!
பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏழாலை பகுதியில் சட்டவிரோதமான மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவது,
நீண்ட நாட்களாக ஏழாலை பகுதியில் இயங்கி வந்ததாக கூறப்படும் சட்டவிரோதமான மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று இன்றைய தினம் பலாலி பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றி வளைப்பின் போது பெரும் அளவிலான கசிப்பும் அதை உற்பத்தி செய்வதற்கான உபகரணங்களும் உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 23 வயது உடைய சந்தேகம் நபரும் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் சான்று பொருளையும் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை பாலாலி பொலிஸார் முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
