Breaking News

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியாவதில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியாவதில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



ஜெயிலர் 2 திரைப்படம் எதிர்வரும் 15 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் முன்பதிவில் இந்திய மதிப்பில் ரூ. 50 கோடியை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்தநிலையில் படத்தின் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே நிலவி வரும் இலாப பங்கீட்டு சதவீத பிரச்சினை காரணமாக, தமிழ்நாட்டின் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் திரையிடப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது.


சமீபத்தில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு 65% இலாப பங்கீடு வழங்கப்பட்ட நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்கும் அதே 65% மட்டுமே கொடுக்க முடியும் என திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆனால், விநியோகஸ்தர்கள் தரப்பில் 75% இலாப பங்கீடு கேட்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த விவகாரத்தில் இரு தரப்பிற்கும் இடையே இதுவரை உடன்பாடு எட்டப்படாததால், குறிப்பிட்ட பகுதிகளில் படம் திரையிடப்படுவதில் நிச்சயமற்ற நிலை நீடித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


#Jailer2 #rajinikanth #nelson #sooriyannews #Srilanka #TruthAtAllCosts