வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு (DCC )கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் ஆராய்வு
வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு (DCC )கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் ஆராய்வு
யாழ் மாவட்ட வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம் காலை 9:30 மணியளவில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி குழு தலைவருமான ரஜீபன் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது
இக் கூட்டத்தில் வடமராட்சி கிழக்கு மக்கள் சுகாதாரம் தொடர்பாக எதிர் நோக்கும் பிரச்சனைகள் மற்றும் வடமராட்சி கிழக்கு எல்லைக்குட்பட்ட பிரதேச வைத்தியசாலைகளின் தேவைகள் மற்றும் நோயாளிகள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராய பட்டதுடன் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான சில முடிவுகள் எடுக்க பட்டது
மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் இடம் பெரும் சட்ட விரோதமாக செயற்பாடுகள் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் நடவெடிக்கைகள் தொடர்பாக ஆரய பட்டதுடன் மருதங்கேணி பொலிஸ் அதிகாரி கெலம் பண்டார அவர்களால் குறிப்பிட்ட காலத்தில் சட்ட விரோத நடவடிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகள் தொடர்பாக எடுத்து கூற பட்டதுடன் சட்ட விரோதமாக செயற்பாடுகளை தடுக்க நேரடியாக தன்னுடன் தொடர்பு கொள்ளும் மாறு கேட்க பட்டது
பின்னர் வடமராட்சி கிழக்கு மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளின் ஒன்றான போக்குவரத்து பிரச்சனைகள் தொடர்பாக ஆராய பட்டதுடன் இதில் முக்கியமாக அபிவிருத்தி செய்ய பட வேண்டிய வீதிகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் தொடர்பாக ஆரயபட்டதுடன் துறை சார்ந்த உத்தியோகத்தர்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டு அதற்கான சில தீர்வுகளும் எடுக்கப்பட்டது
அதனை தொடர்ந்து வடமராட்சி கிழக்கு பிரதேச எல்லைக்குள் உட்பட்ட அதிகளவான நிலப்பரப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தின் எல்லைக்குள் உட்பட்டதாக இருப்பதால் மக்கள் காணி தொடர்பான ஆவணங்கள் இல்லாததால் பாரியளவிலான பிரச்சினைகளை எதிர் நோக்கி வருகின்றனர் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் நிபந்தனைகள் முன்வைக்க பட்டது
இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வினவப்பட்டது பின்னர் அவரால் கருத்துக்கள் முன் வைக்க பட்டது
பின்னர் நீண்ட கால அபிவிருத்திக்காக குத்தகை அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு நிலம் குத்தகைக்கு கொடுப்பது தொடர்பாக ஆரயாப்பட்டது
அதனை தொடர்ந்து வடமராட்சி கிழக்கு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் தனியார் மற்றும் அரச வங்கிகள் நிறுவுதல் மற்றும் மனற்காடு சவுக்கங்காடு பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்டது
முக்கியமாக வெற்றிலைக் கேணி பகுதியில் தனியார் தனியார் நிறுவனத்திற்கு கோரப்பட்ட வின்னப்பத்திற்கு ஆழியவளை மற்றும் வெற்றிலைக் கேணி மக்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்த போது வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இருந்து வந்த பிரதிநிதி தமது குறித்த திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது
குறித்த அனுமதி தொடர்பாக குறித்த கிராமத்தில் உள்ள சமூக மட்ட பிரதிநிதிகளிடம் விருப்பு வெருப்புக்களல கேட்டு சம்மதம் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டது
அதனை தொடர்ந்து கடல் தொழில் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாட பட்டது இதில் சமாசத்திற்கான எரிபொருள் நிரப்பு நிலத்தில் பெற்றோல் மற்றும் டீசல் விற்பனைக்கான அனுமதி வழங்கல் தொடர்பாக கலந்துரையாட பட்டது
இவ் அபிவிருத்தி குழு கூட்டத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச கிராமங்களின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த உத்தியோகத்தர்களர் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்
