தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சனுக்கு அரச ஊடக நிறுவனம் ஒன்றினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சனுக்கு அரச ஊடக நிறுவனம் ஒன்றினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பிரமுகர்கள் சிலரால் குறித்த ஊடகவியலாளர் பணியாற்றும் அரச தொலைக்காட்சி நிறுவனத்துக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த ஊடகவியலாளரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
அண்மையில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார விஜயம் செய்தபோது நடைபெற்ற போராட்டத்தை செய்தி அறிக்கையிட்டதாகவும், ஊடகத் துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன யாழ் மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த போது போராட்டம் நடத்தியமை உள்ளிட்ட பல காரணங்களை சுட்டிக்காட்டியே விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எழுத்து மூலம் கோரப்பட்டால் ஊடக நிறுவனத்திற்கு விளக்கமளிக்க முடியும் என குறித்த ஊடகவியலாளரால் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவ்வாறு செய்ய முடியாது எனவும் இனி செய்தி அனுப்ப தேவையில்லை என்றும் ஊடக அடையாள அட்டையை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் குறித்த ஊடக நிறுவனத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த ஊடகவியலாளர் சுயாதீனமாக செயற்படும் நிலையில் ஏனைய ஊடகங்களுக்கு செய்தி அறிக்கையிட்டது தொடர்பாகவும், செம்மணி மனித புதைகுழி அகழ்வு செய்தி அறிக்கையிடல் தொடர்பிலும், குறித்த ஊடகவியலாளரின் தனிப்பட்ட சமூக வலைத்தள கணக்குகளின் செயற்பாடுகள் தொடர்பாகவும் தேசிய மக்கள் சக்தியினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செய்தி அறிக்கையிடலை மேற்கோள்வதற்கு உரிமையை கொண்டுள்ளபோதும் மாற்றம் என கூறி மார்தட்டி வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் கடந்த அரசாங்க காலங்களை விட மிக மோசமான முறையில் குறித்த ஊடகவியலாளரின் ஊடகப் பணி கேள்வி தொடர்பாக எழுப்பபட்டமை ஊடகவியலாளர்களின் ஊடக சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
அண்மைக்காலமாக அரசாங்கத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் உள்ளிட்ட விடயங்களை அறிக்கையிடும் ஊடகவியலாளர்களை கண்காணித்து அது தொடர்பாக பகிரங்கமாக எச்சரிக்கை விடும் அளவுக்கு தேசிய மக்கள் சக்தியினரின் செயற்பாடு எல்லை மீறியுள்ளமை ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#JZTamil #NPP #Media #Journalist
