Breaking News

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் 160 ஆவது பொலிஸ் தின நிகழ்வுகள் சிறப்புற இடம்பெற்றது!

 பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் 160 ஆவது பொலிஸ் தின நிகழ்வுகள் சிறப்புற இடம்பெற்றது!



160 ஆவது சிறிலங்கா பொலிஸ் தின நிகழ்வுகள் 03/09/2026 பருத்தித்துறை பொலிஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள சர்வமத வழிபாட்டு இடத்தில் காலை 9.00 மணிக்கு சமயத் தலைவர்களின் ஆசியுடன் இடம்பெற்றது.


பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமித் கருணாரத்ன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாக விகாரை பௌத்த துறவி உள்ளிட்ட சமய தலைவர்கள் பங்கேற்று ஆசியுரை வழங்கியிருந்தனர்.


தொடர்ந்து பிரித் ஓதும் நிகழ்வு இடம்பெற்று ஆசி வழங்கப்பட்டது. இதன்போது பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிசார் பங்கேற்றிருந்தனர்.


#pointpedro #பருத்தித்துறை #பொலிஸ் #Police