Breaking News

Tஅதீத ஒளி பாச்சும் சீன மின் விளக்குகள்.. யாழில் 385 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை.



அதீத ஒளி பாச்சும் சீன மின் விளக்குகள்.. யாழில் 385 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை. 



யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பிரான் பெற்றுப் பகுதியில் உள்ள முருகமூர்த்தி ஆலயத்தில் இடம் பெற்ற இரவு திருவிழாவில் அதிகளவிலான சீன தயாரிப்புகளான வான வேடிக்கைகள் மற்றும் அலங்கார மின்விளக்குளினால் சுமார் 385 பேர் கண் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர். 


பாதிப்புக்குள்ளான பொதுமக்கள் யார் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் பலர் சிகிச்சை பெற்று வெளியாறியுள்ளனர்.


குறித்த திருவிழாவுக்கு பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட நிலையில் கண்ணில் பாதிப்பு உணரக்கூடியவர்கள் தாமதிக்காமல் யார் போதன வைத்தியசாலைக்கு வருமாறு பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்


குறித்த சம்பவம் தொடர்பில் அலங்கார மின் விளக்குகளை பொருத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சீன தயாரிப்பு மின் விளக்குகள் மற்றும் பெட்டிகளும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்