தெஹிவளை–கல்கிஸ்ஸ மாநகர சபையின் புதிய முயற்சி – சபை அமர்வுகள் இனி நேரலையில்!
தெஹிவளை–கல்கிஸ்ஸ மாநகர சபையின் புதிய முயற்சி – சபை அமர்வுகள் இனி நேரலையில்!
..............
இலங்கையிலேயே முதன்முறையாக, தெஹிவளை–கல்கிஸ்ஸ மாநகர சபை தனது பொதுச் சபை அமர்வுகளை அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நேரலை (Live stream) செய்யத் தொடங்கியுள்ளது.
சமூக நீதிக் கட்சி உறுப்பினர் அர்காம் முனீர் முன்மொழிந்த இத்திட்டத்திற்கு, மேயர், துணை மேயர் மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர்கள் உட்பட அனைத்துக் கட்சியினரும் ஏகமனதாக ஆதரவளித்தனர்.
உள்ளூராட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் மக்கள் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சபை விவாதங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் உரைகளை பொதுமக்கள் நேரடியாகப் பார்க்க முடியும்
