Breaking News

போராட்டம் செய்யாமல் காணி விடுவிப்பு இடம்பெறாது.. அரசியல்வாதிகளை நம்பி ஏமாந்து போனோம்.. பலாலிப் பெண் ஒருவர் ஆதங்கம்.

 போராட்டம் செய்யாமல் காணி விடுவிப்பு இடம்பெறாது.. அரசியல்வாதிகளை நம்பி ஏமாந்து போனோம்.. பலாலிப் பெண் ஒருவர் ஆதங்கம். 



அரசியல்வாதிகள் எமது காணிகளை பெற்று தருவார்கள் என நம்பி ஏமாந்து போனதால் மக்களாக காணி விடுவிப்புக்கான போராட்டத்தை மேற்கொள்ள ஆரம்பித்தோம் என பலாலி விடுவிக்கப்படாத காணியின் உரிமையாளரான பெண் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 


நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சர்வோதய மண்டபத்தில் இடம்பெற்ற காணி இழந்த மக்களின் கலந்துரையாடல் நிகழ்வில் பலாலி கிழக்கு சார்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


அவர் மேலும் தெரிவிக்கையில் எமது காணிகள் உட்பட பலாலி கிழக்கில் விடுவிக்கப்படாமல் பல ஏக்கர் தனியார் காணிகள் உள்ளன.


உண்மையில் காணி விடுவிப்பு தொடர்பில் போராடாமல் இருந்தோம் காரணம் எமது தமிழ் அரசியல்வாதிகள் அரசாங்கத்துடன் பேசி எமது காணிகளை விடுவித்து தருவார்கள் என அது நடைபெறவில்லை. 


தற்போதைய நாட்டின் ஜனாதிபதி ஆட்சிக்கு வர முன்னர் மக்களின் கனிகளை மக்களிடம் தருவே என உறுதிமொழி வழங்கி ஆட்சிக்கு வந்தார் அதுவும் நடைபெறவில்லை. 


ஆகையால் போராடாமல் எமது காணிகளை யாரும் விடுவித்து தர மாட்டார்கள் என உணர்ந்ததால் மக்களாக ஒன்றிணைந்து எமது காணி விடுவிப்புக்கான போராட்டத்தை ஆரம்பித்தோம். 


எமது பிள்ளைகளுக்கு பாதுகாப்பு நிலையத்தில் உள்ள காணிகள் தொடர்பில் ஏதும் தெரியாது நாங்கள் உயிருடன் இருக்கும்போது பெற்று கொடுத்தால் மட்டுமே அவர்களால் காண முடியும். 


ஆகவே எமது காணிகளை விரைவாக விடுதலை விடுவிப்பதற்கான போராட்டத்தில் அனைத்து மக்களும் பங்களிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.