முன்னைய அரசாங்கம் தவறு என்கிறார்கள் .. அவர்களின் திட்டம் மட்டும் நல்லதா? பூநகரியில் காற்றாலைக்கு எதிராக போராடும் அமைப்பு கேள்வி.
முன்னைய அரசாங்கம் தவறு என்கிறார்கள் .. அவர்களின் திட்டம் மட்டும் நல்லதா? பூநகரியில் காற்றாலைக்கு எதிராக போராடும் அமைப்பு கேள்வி.
கடந்த ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பூநகரி காற்றாலை திட்டம் என கூறும் கடற் தொழில் அமைச்சர் சந்திரசேகரன் மக்கள் அவர்களை விரட்டிய நிலையில் அவர்களின் திட்டத்தை ஏன் நீங்கள் தொடர்கிறீர்கள் என பூநகரி காற்றாலைக்கு எதிரான மக்கள் அமைப்பின் பிரதிநிதி கேள்வி எழுப்பினார்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காணியை இழந்த மக்கள் அமைப்பின் கலந்துரையாட நிகழ்வில் பூநகரி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பெண்னாவெளி மற்றும் கிராஞ்சி பகுதிகளில் அமைய உள்ள காற்றாலை திட்டத்தின் ஆபத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த காற்றாலை திட்டம் அமையவுள்ள பகுதிகள் மக்களுக்கு ஆபத்தானது மாற்று இடம் ஒன்றை தெரிவு செய்யுமாறு அப்பகுதி மக்கள் அமைச்சர் சந்திரசேகரனிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
அதன் போது அமைச்சர் இது எங்களுடைய ஆட்சி காலத்தில் இடம் பெறவில்லை முன்னே ஆட்சி காலத்தில் போடப்பட்ட திட்டம் என பதில் கூறி நழுவி சென்றார்.
அவரிடம் நாங்கள் ஒன்றைக் கேட்க விரும்புகிறோம் கடந்த கால அரசாங்கம் மோசடியான அரசாங்கம் மக்களுக்கு விரோதமான அரசாங்கம் என மக்கள் கருத்தியபடியால் அதனை விரட்டி அடித்தார்கள்.
அவ்வாறான ஒரு அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தை மாற்றம் என்ற போர்வையில் வந்த தற்போதைய அரசாங்கம் மக்களின் விருப்பத்தை அறியாமல் நடைமுறைப்படுத்த முனைவது சரியானதா.
கடந்த கால அரசாங்கங்கள் என்ன நோக்கத்திற்காக இந்த திட்டங்களை கொண்டு வந்தார்கள் என ஆராயாமல் அதே திட்டங்களை தங்களுடைய அரசியல் நிலங்களுக்காக புதிய அரசாங்கம் மேற்கொள்ள முனைவது மக்கள் விரோத செயலாகும்.
பூநகரி காற்றாலை மக்களுக்கு ஆபத்து என பல்வேறு தரப்பினர்களும் குரல் கொடுத்து வருகின்ற நிலையில் அதனை பொருட்படுத்தாது அமைச்சர் சந்திரசேகரன் செயல்படுவது மன வேதனையை தருகிறது.
ஆகவே திட்டங்களை நாங்கள் எதிர்க்கவில்லை அதனை மக்களுடன் கலந்துரையாடி மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் திட்டங்களை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் முன் வர வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்
