பலாலி கிழக்கு பக்கமாக உள்ள காணிகள் விடுவிக்கப்படும் .. திகதி மாதம் குறிப்பிட்ட முடியாது. யாழில் அமைச்சர் விமல் தெரிவிப்பு.
பலாலி கிழக்கு பக்கமாக உள்ள காணிகள் விடுவிக்கப்படும் .. திகதி மாதம் குறிப்பிட்ட முடியாது. யாழில் அமைச்சர் விமல் தெரிவிப்பு.
பலாலி கிழக்கு பக்கமாக உள்ள பொது மக்களின் காணிகள் சில ஏக்கர்களை விடுவிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ள நிலையில் அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விமல் ராட்நாயக்க தெரிவித்தார்
நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் கட்சித் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வலிவடக்கில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அண்மையில் பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
அந்த வகையில் பலாலி கிழக்குப் பக்கமாக உள்ள காணிகள் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன்போது ஊடகவியலாளர் காணி விடுவிப்பு தொடர்பில் மாதம் அல்லது திகதியை உங்களால் உறுதிப்பட கூற முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
பதில் வழங்கிய அமைச்சர் விடுவிக்கும் திகதி அல்லது மாதம் தொடர்பில் உறுதியாக கூற முடியாது இருந்த போதும் மிக விரைவாக விடுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்
