Breaking News

கலாநிதி நா.தணிகாசலம்பிள்ளை எழுதிய இரு நூல்கள் வெளியீடு.

 கலாநிதி நா.தணிகாசலம்பிள்ளை எழுதிய இரு நூல்கள் வெளியீடு. 


வடமாகாண முன்னாள் மாகாண கல்விப்பணிப்பாளர் கலாநிதி நா.தணிகாசலம்பிள்ளை எழுதிய " குழந்தமைக் கல்வியும் ஆரம்பச் செயற்பாடுகளும் மற்றும் " புலம்பெயர் நாடுகளில் இலகு தமிழ் " என்கின்ற இரு நூல் வெளியீடு நேற்று புதன்கிழமை யாழ் இந்துக் கல்லூரி சபாலிங்கம் மண்டபத்தில் முன்னாள் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன் தலைமையில் இடம்பெற்றது. 


ஆசி உரையை சிவஸ்ரீ சுந்தரேஸ்வரக் குருக்கள் வழங்கினார் தலைமை உரையினை வடமாகாண முன்னாள் பிரதம செயலாளர் இளங்கோவன் ஆற்றினார்.


நூல் வெளியீட்டினை வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் வெளியிட்டு வைக்க முதல் பிரதியை பேராசிரியர் தேவராஜா பெற்றுக்கொண்டார். 


நிகழ்வில் யாழ் போதனா வைத்திய சாலையைச் சேர்ந்த வைத்திய நிபுணர்களான வைத்திய நிபுணர் சிவன் சுதன், வைத்தியர் நிபுணர் அரவிந்தன் மற்றும் வைத்திய பேராசிரியர் பாலகோவி ஆகியோரின் சேவையைப் பாராட்டி கௌரவிப்பு இடம்பெற்றது. 


குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் யாழ் கோப்பாய் கலாசாலை அதிபர் லலீசன், யாழ் வலையக் கல்விப் பணிப்பாளர் திருமதி மாலதி முகுந்தன்,யாழ் மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் வலம்புரி பத்திரிகையினுடைய ஆசிரியர் நல்லையா விஜயசுந்தரம், இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறுவன்புலவு க ச சச்சிதானந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.