Breaking News

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகளான அனயா பங்கர் (Anaya Bangar), அவுஸ்திரேலியாவில் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அனுமதி பெற்றுள்ளார்.

 இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகளான அனயா பங்கர் (Anaya Bangar), அவுஸ்திரேலியாவில் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அனுமதி பெற்றுள்ளார்.



இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட அனயா பங்கர், 2027 மார்ச் மாதத்தில் எலைட் மகளிர் கிரிக்கெட்டில் விளையாடும் இலக்குடன் அவுஸ்திரேலியாவில் உள்ளூர் போட்டிகளில் களமிறங்கத் தயாராகி வருகிறார்.


அவுஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்தின் (Cricket Australia) கொள்கைப்படி, மகளிர் எலைட் பிரிவில் போட்டியிட விரும்பும் வீரர்களின் இரத்த டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்தபட்சம் 12 மாதங்களுக்கு தொடர்ந்து 10 nmol/L-க்கு கீழே இருக்க வேண்டும்.


அனயா பங்கர் வழங்கிய மருத்துவத் தகவல்களின் அடிப்படையில், 2027 மார்ச் மாதத்தில் இந்த 12 மாத காலத் தேவை பூர்த்தி செய்யப்படும் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. 


அதன் பிறகு இரத்தப் பரிசோதனை மூலம் டெஸ்டோஸ்டிரோன் அளவு தொடர்ந்து உரிய வரம்பிற்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


இந்தநிலையில், தகுதி பெறுவது என்பது அணியில் இடம்பிடிப்பதை உறுதி செய்யாது என்றும், தனது திறமையை நிரூபித்து அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்றும் அனயா பங்கர் தெரிவித்தார். 


மகளிர் பிக் பாஷ் லீக் (WBBL) போட்டிகளில் விளையாடுவதே தனது லட்சியம் என்றும் அவர் கூறியுள்ளார்.


இதற்கிடையில், சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில், திருநங்கைகள் பங்கேற்க முடியாது என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை 2023-ல் தடை விதித்துள்ளது


எனினும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் உள்நாட்டு விதிகளும் சர்வதேச கிரிக்கட் பேரவையின் விதிகளும் மாறுபட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.


#Sooriyannews #cricket #TruthAtAllCosts #sports #anayabanger #WBBL #australia