Breaking News

கரவெட்டி பிரதேச சபை உறுப்பினருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி



கரவெட்டி பிரதேச சபை உறுப்பினருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி 




வர்த்தகரும் நெல்லியடி வர்த்தக சங்கத்தின் முன்னாள் செயலாளரும், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் உறுப்பினருமான இரத்தினசாபாபதி சுரேரஞ்சன் அவர்களின் உடலிற்கு அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள், வாடகை வாகன உரிமையாளர்கள், சாரதிகள் நடத்துனர்கள் என நூற்றுக் கணக்கானவர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர் 


கடந்த 08/08/2026 அன்று சுகயீனம் காரணமாக தனது 49 வது வயதில் சாவடைந்திருந்த நெல்லியடியின் வர்த்தரும், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினரும், சமூக சேவகருமான சுரேரஞ்சன் அவர்களின் உடலிற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பிரதேச மக்கள் என பலரும் மலர் வளையம் வைத்தும் மலர் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். 


பிரதேசம் மக்களுக்கும் வர்த்தகர் சங்கத்திற்கும், தமிழ் தேசிய சிந்தனையோடு பல்வேறு சமூக சேவைகளை ஆற்றியவர் என அரசியல்வாதிகள், வர்த்தவர்கள், பொதுமக்கள் என பலரும் நினைவுகூர்ந்து அஞ்சலி உரை நிகழ்த்தினர்.


இங்கு உரை நிகழ்த்திய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சுரே ரஞ்சன் அவர்களது இழப்பு அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல, தமிழ் சமூகத்துக்கும் பேரிழப்பாகும் என்றும், ஒரு தமிழ் தேசிய சிந்தனையாளன், தமிழ் தேசிய செயற்பாட்டாளனை இந்த பிரதேசம் இழந்து நிற்கிறது என்றும், அவருடைய எண்ணம் சிந்தனை எல்லாம் தமிழ் தேசியத்திற்காகவும் மக்களுடைய நலன்களுக்காகவே இருந்தது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.


முன்னதாக இன்று காலை சுரே ரஞ்சன் அவர்களது இல்லத்தில் சமய கிரிகைகள் இடம் பெற்று அங்கிருந்து உடலம் நெல்லியடி பஸ் தரிப்பு நிலையத்தில் நெல்லியாடி வர்த்தகர்களால் அஞ்சலி கூட்டம் நடத்திய போதே பிரதேச மக்கள், வர்த்தகர்கள், வாடகை வாகன உரிமையாளர்கள், அரசியல்வாதிகள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். சுரே ரஞ்சனின் உடலம் சோன ப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.