தம்பசிட்டி மலையந்தோட்டம் முருகன் ஆலயத்தில் இருந்து பாதயாத்திரையாக செல்வச் சந்நிதி ஆலயத்தை வந்தடைந்த அடியவர்கள்
தம்பசிட்டி மலையந்தோட்டம் முருகன் ஆலயத்தில் இருந்து பாதயாத்திரையாக செல்வச் சந்நிதி ஆலயத்தை வந்தடைந்த அடியவர்கள்
யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசத்தின் தம்பசிட்டி மலையந்தோட்டம் சிறீமுருகன் ஆலயத்தில் இருந்து இன்று 12.08.2026 புதன்கிழமை அதிகாலை வேலுடன் பாதயாத்திரையாக யாத்திரிகர்கள் புறப்பட்டு 9.30 மணியளவில் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்தப் பாதயாத்திரைக் குழுவில் வயதானவர்களுடன் அதிகளவு இளைஞர்கள் பங்கேற்றுள்ளதுடன், இன்றிரவு இடம்பெறும் சந்நிதி முருகன் ஆலய கொடியேற்ற நிகழ்விலும் கலந்து கொண்டு, வேலையும் கோவிலில் ஒப்படைக்கவுள்ளதாகவும் தம்பசிட்டி மலையந்தோட்டம் முருகன் ஆலய பொருளாளரான பொ. சூரியகுமார் தெரிவித்தார்.
