ஹிருணிகா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு நவம்பர் 02 வரை ஒத்திவைப்பு!
ஹிருணிகா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு நவம்பர் 02 வரை ஒத்திவைப்பு!
................
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின் போது, கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீதிகளை மறித்து, பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமை முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சம்பவத்துடன் தொடர்புடைய புலனாய்வு விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், மேலதிக அறிவுறுத்தல்களைப் பெறுவதற்காக வழக்கின் கோவைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.
இதனையடுத்தே, வழக்கின் விசாரணைகளை நவம்பர் 02 ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
