500 ட்ரோன்களுடன் ஒளிரப்போகும் லங்கா பிரீமியர் லீக் (LPL) ஆரம்ப விழா!
==============
இம்மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் ஆரம்ப விழாவில், பிரம்மாண்ட ட்ரோன் (Drone)காட்சியொன்றை நடத்துவதற்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கமைய, 500 ட்ரோங்களை வானில் பறக்கவிட்டு இந்த ஆரம்ப விழா காட்சியை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
லங்கா பிரீமியர் லீக் தொடரின் 6ஆவது பருவகாலம் (6th Edition) இம்மாதம் 17ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு கொழும்பு எஸ்.எஸ்.சி. (SSC) மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதன் முதலாவது போட்டியில் யாழ்ப்பாணம் மற்றும் காலி அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
