தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெறும் நடபாதை அபிவிருத்தி பணிகளில் குறைபாடுகள் – எம்.பி. மஞ்சுள ரத்நாயக்கவிடம் தவிசாளர் நேரில் சுட்டிக்காட்டல்
தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெறும் நடபாதை அபிவிருத்தி பணிகளில் குறைபாடுகள் – எம்.பி. மஞ்சுள ரத்நாயக்கவிடம் தவிசாளர் நேரில் சுட்டிக்காட்டல்
(நபீஹா அம்ரின்)
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு முன்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடபாதை அபிவிருத்திப் பணிகள் தூரநோக்கு அற்ற வகையிலும், முறையற்ற விதத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.
இது தொடர்பாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள ரத்நாயக்கவை நேரடியாக குறித்த இடத்திற்கு அழைத்துச் சென்று, அப்பணிகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் குறித்து கௌரவ தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினரிடம் விளக்கமளித்துடன் சுட்டிக்காட்டினார்.
இதன்போது சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை அமைப்பாளருமான வை.வீ.எம். நபாஸ் அவர்களும் கலந்துகொண்டார்.
