குட்டிமணி தங்கத்துரை ஆகியோரது சிலை நிறுவுவதற்கு எதிர்வரும் 4/8/2026 வரை தற்காலிக தடை...!
குட்டிமணி தங்கத்துரை ஆகியோரது சிலை நிறுவுவதற்கு எதிர்வரும் 4/8/2026 வரை தற்காலிக தடை...
1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது திருவுருவச் சிலை அவர்களது 43-வது நினைவு தினமான எதிர்வரும் 25/7/2026 அன்று நிறுவுவதற்கு ஏற்பாடாகியிருந்த நிலையில் வல்வெட்டித்துறை போலீசாரால் அதன் சிலை நிறுஉனர்களில் ஒருவரான சதீஷ் அவர்கள் வல்டித்துறை காவல் நிலையம் அழைக்கப்பட்டு அங்கு வாக்குமூலம் பெறப்பட்டு நேற்று முன்தினம் நீதிமன்றத்தின் முற்படுத்தப்பட்டு இன்றுவரை அவர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் பருத்தித்துறை நீதவான் வழக்கு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதில் சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, விஸ்வலிங்கம் மணிவண்ணன் உட்பட பலர் ஆஜராகியிருந்த நிலையில் பருத்தித்துறை கௌரவ நீதவான் அவர்களால் எதிர்வரும் நாலாம் தேதி வரை குறித்த சிலை நிறுவுவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான கட்டளையை பிறப்பித்துள்ளது.
