ரூ. 40 மில்லியன் செலவில் நவீனமயமாக்கப்பட்ட நாரஹேன்பிட்ட புகையிரத நிலையம் இன்று திறப்பு!
ரூ. 40 மில்லியன் செலவில் நவீனமயமாக்கப்பட்ட நாரஹேன்பிட்ட புகையிரத நிலையம் இன்று திறப்பு!
நாடளாவிய ரீதியில் 100 புகையிரத நிலையங்களை நவீனமயமாக்கும் "Dream Destination" திட்டத்தின் கீழ், முழுமையாகப் புனரமைக்கப்பட்ட நாரஹேன்பிட்ட புகையிரத நிலையம் இன்று (06) மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது. போக்குவரத்து அமைச்சின் வழிகாட்டலில், ‘MAGA’ கட்டுமான நிறுவனத்தின் 40 மில்லியன் ரூபா நிதிப் பங்களிப்புடன் இப்புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ், புதிய பயணிகள் மேம்பாலம், நீடிக்கப்பட்ட 2-வது மேடை (Platform), மேம்படுத்தப்பட்ட சுகாதாரக் கட்டமைப்பு, நவீன மின்விளக்கு வசதிகள் மற்றும் கார்பெட் (Carpet) இடப்பட்ட பிரவேச வீதி உள்ளிட்ட அனைத்துப் பௌதீகக் கட்டமைப்புகளும் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. “Clean Sri Lanka” திட்டத்தின் ஒரு அங்கமாக பயணிகள் வசதிக்காக இந்த நவீனமயமாக்கல் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.
