Breaking News

நீர்கொழும்பு சிறைச்சாலையில் வரலாறு காணாத வன்முறை: உயிரிழப்பு 25 ஆக அதிகரிப்பு; இராணுவம் குவிப்பு!

 நீர்கொழும்பு சிறைச்சாலையில் வரலாறு காணாத வன்முறை: உயிரிழப்பு 25 ஆக அதிகரிப்பு; இராணுவம் குவிப்பு!


===============



நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்டுள்ள கடுமையான பதற்ற நிலை மற்றும் மோதல்கள் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை இதுவரையில் 25 ஆக உயர்ந்துள்ளதாக நீர்கொழும்பு மருத்துவமனை காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.


உயிரிழந்தவர்களில் ஐந்து சிறைச்சாலை அதிகாரிகளும், 20 கைதிகளும் அடங்குவதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. நேற்று இரு கைதி குழுக்களுக்கு இடையே ஆரம்பமான இந்த மோதல் நிலை, இன்று சிறை அதிகாரிகளுடனான வன்முறையாக மாறி பெரும் இரத்தக் களரியாக உருவெடுத்துள்ளது.


பாதுகாப்பிற்கு இராணுவம் குவிப்பு:

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று தொடர்ந்து இடம்பெற்று வரும் இந்த பயங்கர மோதல் நிலையைக் கருத்திற்கொண்டு, சிறைச்சாலை வளாகத்தின் மேலதிக பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவ வீரர்கள் தற்போது அதிரடியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் (STF) நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்று வரும் சூழலில், பாதுகாப்பு பலப்படுத்துவதற்காக இராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.