இந்திய அரசின் 28 இலட்சம் ரூபா நிதியுதவியுடன் பசறையில் அமையவுள்ள 57 புதிய வீடுகள்
இந்திய அரசின் 28 இலட்சம் ரூபா நிதியுதவியுடன் பசறையில் அமையவுள்ள 57 புதிய வீடுகள்
========
இந்திய வீட்டுத்திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ், பதுளை மாவட்டத்தின் பசறை, கனவரல்ல தோட்டப் பகுதியில் மண்சரிவு அபாயத்தில் வாழ்ந்து வந்த 57 குடும்பங்களுக்கான புதிய வீடமைப்புத் திட்டத்திற்கு இன்று (06) அடிக்கல் நாட்டப்பட்டது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்திய துணை உயர்ஸ்தானிகர் ஹர்விந்தர் சங் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
"வளமான நாடு – அழகிய வாழ்க்கை" என்ற கொள்கையின் கீழ் 10,000 வீடுகளை அமைக்கும் இத்திட்டத்திற்கு இந்திய அரசு ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 28 இலட்சம் ரூபாயும், இலங்கை அரசு அடிப்படை வசதிகளுக்காகத் தலா 4 இலட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்கியுள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பான நிரந்தர வாழ்விடம் உறுதி செய்யப்படவுள்ளது.
