கால்பந்து கிண்ண வரலாற்றில் இதுவரை இடம்பெறாத புதிய சாதனை ஒன்று நடப்பு தொடரில் முதன்முறையாகப் பதிவாகியுள்ளது.
கால்பந்து கிண்ண வரலாற்றில் இதுவரை இடம்பெறாத புதிய சாதனை ஒன்று நடப்பு தொடரில் முதன்முறையாகப் பதிவாகியுள்ளது.
அதன்படி, ஒரே கால்பந்து கிண்ணத் தொடரில் 3 வீரர்கள் தலா 7 கோல்களைப் பதிவு செய்திருப்பது கால்பந்து வரலாற்றில் முதல் முறையாகும்.
இந்த வரலாற்றுச் சாதனையை லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), கிலியன் எம்பாப்பே (Kylian Mbappé) மற்றும் எர்லிங் ஹாலாண்ட் (Erling Haaland) ஆகியோர் தலா 7 கோல்களை அடித்துப் படைத்துள்ளனர்.
இந்த வீரர்களின் அபாரமான கோல் வேட்டை, நடப்பு கால்பந்து கிண்ணத் தொடரின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகக் கருதப்படுவதுடன், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இதனிடையே, நோர்வே அணி கால்பந்து கிண்ண வரலாற்றில் முதன்முறையாக காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி மற்றுமொரு வரலாற்றுச் சாதனையையும் பதிவு செய்துள்ளது.
#F
