Breaking News

கோப்பாயில் அமைந்துள்ள பிரபல food city யில் தரமற்ற உப்பு விற்பனை. சிறைத்தண்டனை.

 கோப்பாயில் அமைந்துள்ள பிரபல food city யில் தரமற்ற உப்பு விற்பனை. சிறைத்தண்டனை.



 #கோப்பாயில் தரமற்ற உப்பு விற்பனை. இருவரிற்கு தண்டத்துடன் ஒன்றரை வருட #சிறைதண்டனை விதிப்பு...


கோப்பாய் பகுதி பொது சுகாதார பரிசோதகர் எ. ஜோ. எர்ஷன் றோய் அவர்களால் கோப்பாய் சந்தியில் இயங்கும் பிரபல பூட் சிற்றியில் 18.02.2026ம் திகதி #உப்பு மாதிரிகள் பெறப்பட்டன. பெறப்பட்ட உப்பு மாதிரிகளின் தரம் தொடர்பில் பகுப்பாய்வு செய்வதற்காக அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டன.


இந்நிலையில் அனுப்பி வைக்கப்பட்ட உப்பானது தரமற்றது என பகுப்பாய்வு திணைக்கள அறிக்கை கிடைக்கப்பெற்றது.


இதனையடுத்து பூட்சிற்றி முகாமையாளர் மற்றும் உப்பு உற்பத்தி நிறுவன முகாமையாளர் ஆகியோரிற்கு எதிராக இன்றைய தினம் 02.06.2026ம் திகதி யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர் எர்சன் றோய் இனால் தலா மூன்று குற்றச்சாட்டுக்கள் வீதம் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.


வழக்கினை விசாரணை செய்த நீதவான் எதிராளிகளிற்கு, ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 6,000/= வீதம் மொத்தம் 36,000/= தண்டம் விதிக்கப்பட்டது. அத்துடன் எதிராளிகளிற்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் சிறைத்தண்டனையினை ஏககாலத்தில் அனுபவிக்குமாறு உத்தரவிட்டார். அத்துடன் குறித்த உப்பு பைக்கற்றுகளினை வினியோகிக்கப்பட்ட இடங்களில் இருந்து மீளப்பெறுமாறும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.