Breaking News

பஹ்ரைன் பிரஜைகள் ஈரான் மற்றும் ஈராக்கிற்கு பயணிக்க தடை: உள்நாட்டு அமைச்சு அவசர உத்தரவு!

 பஹ்ரைன் பிரஜைகள் ஈரான் மற்றும் ஈராக்கிற்கு பயணிக்க தடை: உள்நாட்டு அமைச்சு அவசர உத்தரவு!


.....



பஹ்ரைன் பிரஜைகள் ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு அந்நாட்டு உள்நாட்டு அமைச்சு அதிரடித் தடையை விதித்துள்ளது.


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் பாதுகாப்பு பதற்ற நிலைமைகளைக் கருத்திற்கொண்டே இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிராந்தியத்தின் பாதுகாப்பற்ற தன்மையைக் கருத்திற் கொண்டு பஹ்ரைன் பிரஜைகள் அனைவரும் இந்தத் தடையுத்தரவை முழுமையாகப் பின்பற்றி நடக்குமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.