Breaking News

ஈரானை வீழ்த்தி முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது எகிப்து!

 ஈரானை வீழ்த்தி முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது எகிப்து!



2026 உலகக் கோப்பையின் குரூப் 'ஜி' (Group G) போட்டியில் ஈரானுக்கு எதிரான ஆட்டத்தை 1-1 என சமநிலை செய்ததன் மூலம், எகிப்து அணி வரலாற்றில் முதன்முறையாக நாக்-அவுட் (சுற்று 32) சுற்றிற்குத் தகுதி பெற்றுள்ளது.


இப்போட்டியில் எகிப்தின் சாபர் 5வது நிமிடத்தில் கோல் அடிக்க, ஈரானின் ரேசாயன் 14வது நிமிடத்தில் அதனைச் சமன் செய்தார். ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் ஈரான் அடித்த கோல் VAR பரிசோதனையில் 'ஆப்சைட்' என மறுக்கப்பட்டது. இதனால் எகிப்து 5 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தைப் பிடித்து, அடுத்த சுற்றில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.


இதேவேளையில், நியூசிலாந்தை 5-1 என வீழ்த்திய பெல்ஜியம் அணி, கோல் வித்தியாச அடிப்படையில் குழுவில் முதலிடத்தைப் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. 3 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலுள்ள ஈரான் அடுத்த சுற்று வாய்ப்பிற்காகக் காத்திருக்கிறது.