Breaking News

மாலை சந்தை மைக்கல் விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த விளையாட்டு விழா 2026


மாலை சந்தை மைக்கல் 

விளையாட்டுக்கழகத்தின்

வருடாந்த விளையாட்டு விழா 2026



யாழ்ப்பாணம் வடமராட்சி மைக்கேல் விளையாட்டு கழகத்தின் துட்டுப்பாட்ட இறுதிப் போட்டிகளும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று பிற்பகல் 4:00 மணியளவில் மைக்கல் விளையாட்டு கழக மைதானத்தில் மைக்கல் விளையாட்டு கழக துட்டுப்பாட்ட அணி தலைவர் மனோகரன் ரகுவரன் தலைமையில் ஆரம்பமானது. 


இதில் மங்கல சுடர்களை நிகழ்வின் பிரதம விருந்தினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொது செயலாளருமான செல்வராசா கஜேந்திரன், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும் ஊடக பேச்சாளருமான சட்டத்தரணி கனகரட்னம் சுகாஷ், சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட யா/இடைக்காடு மகா வித்தியாலய ஆசிரியர் 

S. சிவசுகிர்தன், வடமராட்சி ஊடக இல்ல தலைவர் கு. மகாலிங்கம், யா/ ஹாட்லிக் கல்லுாரி ஆசிரியர் R.ராகவன், யாழ்ப்பாணம் மாவட்ட தடகள வீரர் இ. முரளிதரன், சமூக மாற்றத்திற்கான ஊடக மைய்ய தலைவர் சி.த.காண்டீபன், தொழில் நுட்ப உத்தியோகத்தர் கி. ஸ்ரீதரன், ஆகியோர் ஏற்றி வைத்தனர்.


அதனை தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய அல்வாய் யூத் அணி மற்றும் மாலிசந்தி மைக்கல் அணி ஆகியவற்றிற்கான இறுதி போட்டி வீரர்கள் அறிமுகம் இடம்பெற்றதை தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமகின. இதில் மாலிசந்தி மைக்கல் வெற்றி பெற்றது. இதில் சிறப்புரையினை 

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், ஊடக பேச்சாளருமான சட்டத்தரணி கனகரட்னம் சுகாஷ் நிகழ்த்தியதை தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் நடாத்தப்பட்ட மென்பந்து துடுப்பாட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய கழகங்களுக்கான 

பரிசில்கள், பதக்கங்கள், கெடயங்களை  

பிரதம விருந்தினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொது செயலாளருமான செல்வராசா கஜேந்திரன், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், ஊடக பேச்சாளருமான சட்டத்தரணி கனகரட்னம் சுகாஷ், சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட யா/இடைக்காடு மகா வித்தியாலய ஆசிரியர் 

S. சிவசுகிர்தன், வடமராட்சி ஊடக இல்ல தலைவர் கு. மகாலிங்கம், யா/ ஹாட்லிக் கல்லுாரி ஆசிரியர் R.ராகவன், யாழ்ப்பாணம் மாவட்ட தடகள வீரர் இ. முரளிதரன், சமூக மாற்றத்திற்கான ஊடக மைய்ய தலைவர் சி.த.காண்டீபன், தொழில் நுட்ப உத்தியோகத்தர் கி. ஸ்ரீதரன், ஆகியோர் வழங்கிவைத்தனர். இன்றைய நிகழ்வில் போட்டிகளில் பங்கு பற்றிய கழகங்களின் வீரகள், மைக்கல் வீரர்கள் என பலரும் கலந்துகொண்டு போட்டிகளை கண்டு கழித்தனர்.