பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும் கலைஞர் சங்கீதனின் விடுதலைக்காகவும் கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும் கலைஞர் சங்கீதனின் விடுதலைக்காகவும் கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞர் சங்கீதனின் விடுதலையை வலியுறுத்தியும், "தமிழர்களுக்கு ஒரு நீதி, சிங்களவர்களுக்கு ஒரு நீதியா?" என்ற கேள்வியை எழுப்பியும் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மதக் குருமார்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகள்:
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு: மனித உரிமைகளைப் பறிக்கும் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) உடனடியாக நீக்க வேண்டும்.
அராஜகக் கைதுகளை நிறுத்து: இச்சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ் இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அரச பயங்கரவாதக் கைதுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
கலைஞன் 'சங்கீ'யை விடுதலை செய்: அரசியல் பழிவாங்கல்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ள இளம் கலைஞர் சங்கீதனை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, நீதி கோரி கோஷங்களை எழுப்பி தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்
