யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் 21 வயது இளைஞன் மரணம்..
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் 21 வயது இளைஞன் மரணம்..
மட்டுவில் பகுதியிலிருந்து புத்தூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் திடீரென குறுக்கே சென்ற முச்சக்கர வண்டி மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது டிப்பர் முச்சக்கர வண்டியின் மீது ஏறியதில் அதில் பயணம் செய்த மூன்று இளைஞர்களும் கால் நசுங்கி படுகாயமடைந்த நிலையில் 21 வயதுடைய புத்தூர் கிழக்கை சேர்ந்த வாசன் காஜானன் இன்று அதிகாலை சாவாடைந்துள்ளார். மற்றைய இருவரது நிலையும் கவலைக்கிடமாக உள்ளனர்.
படுகாயமடைந்த மற்றைய இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர். விபத்து தொடர்பான விசாரனைகளை அச்சுவேலி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்
