Breaking News

தீப்பந்தம் திரைப்பட விசேட காட்சி - மாணவர்களால் நிறைந்தது யாழ். பல்கலையின் கைலாசபதி கலையரங்கம் Video - https://we.tl/t-ixXwvdNgsPtYywW5 Photos - https://we.tl/t-6v6ZzJt7aCZyE5YZ ஈழத்துக் கலைஞர்களின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவான தீப்பந்தம் முழுநீளத் திரைப்படம் 05.06.2026 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் திரையிடப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஆதரவோடு இடம்பெற்ற மேற்படி திரையிடலில் அரங்கம் நிறைந்த மாணவர்களும், கல்வியியலாளர்களும், செயற்பாட்டாளர்களும் குறித்த திரைப்படக் காட்சியை பார்வையிட்டனர். யாழ் நூலக எரிப்பு ஏற்படுத்திய மாறாத வடுக்கள், பல்கலைக்கழக தரப்படுத்தல் மாணவர்களின் கல்வியில் எவ்வாறான ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியது, தொடரும் போர் வடுக்கள் மற்றும் தமிழ்மக்களின் இருப்புக்கு இனம்சார்ந்து ஆவணப்படுத்தலின் அவசியம் போன்ற பல்வேறு விடயங்களையும் அழுத்தமாக பேசுவதாக படத்தை பார்த்த மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். வழமையாக எழுத்தோட்டத்துடன் படம் முடிந்தவுடன் பார்வையாளர்கள் எல்லோரும் சென்று விடுவார்கள், ஆனால் குறித்த படம் ஏற்படுத்திய அதிர்வுகள் காரணமாக மாணவர்கள் பொறுமையாக இருந்து அதனை பற்றி உரையாடினார். சில மாணவர்கள் மேடைக்கு வந்து தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். படம் வெளியாகி சரியாக ஓராண்டு கடந்திருந்தாலும் இன்று மாணவர்கள் மத்தியில் திரையிடப்பட்டதும், அவர்கள் அதனை பார்வையிட்டு கருத்துகளை பகிர்ந்து கொண்டமையும் தங்களை மேலும் உற்சாகப்படுத்தியதாகவும், இவ்வாறான நுண்ணரசியல் களங்களை உடைய படங்களை தொடர்ந்தும் வழங்குவோம் என குறித்த படத்தின் திரைக்கதையை எழுதிய பூவன் மதீசனும், படத்தை இயக்கிய ராஜ் சிவராஜ் உள்ளிட்ட படக் குழுவினர் கருத்து தெரிவித்ததோடு, படத்தை பார்வையிட்ட மாணவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, ஊடகக் கற்கைகள் துறையின் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான பூங்குழலி சிறிசங்கீர்த்தனன், வரலாற்றுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன், சமூக செயற்பாட்டாளரும், மருத்துவருமான உதயசீலன் கற்கண்டு, குரலற்றவரின் குரல் அமைப்பை சேர்ந்த முருகையா கோமகன், காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பைச் சேர்ந்த தாய்மார்கள், தமிழின உணர்வாளர்கள், செயற்பாட்டாளர்கள் என பலரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

 தீப்பந்தம் திரைப்பட விசேட காட்சி - மாணவர்களால் நிறைந்தது யாழ். பல்கலையின் கைலாசபதி கலையரங்கம்





ஈழத்துக் கலைஞர்களின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவான தீப்பந்தம் முழுநீளத் திரைப்படம் 05.06.2026 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் திரையிடப்பட்டது.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஆதரவோடு இடம்பெற்ற மேற்படி திரையிடலில் அரங்கம் நிறைந்த மாணவர்களும், கல்வியியலாளர்களும், செயற்பாட்டாளர்களும் குறித்த திரைப்படக் காட்சியை பார்வையிட்டனர்.



யாழ் நூலக எரிப்பு ஏற்படுத்திய மாறாத வடுக்கள், பல்கலைக்கழக தரப்படுத்தல் மாணவர்களின் கல்வியில் எவ்வாறான ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியது, தொடரும் போர் வடுக்கள் மற்றும் தமிழ்மக்களின் இருப்புக்கு இனம்சார்ந்து ஆவணப்படுத்தலின் அவசியம் போன்ற பல்வேறு விடயங்களையும் அழுத்தமாக பேசுவதாக படத்தை பார்த்த மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.


வழமையாக எழுத்தோட்டத்துடன் படம் முடிந்தவுடன் பார்வையாளர்கள் எல்லோரும் சென்று விடுவார்கள், ஆனால் குறித்த படம் ஏற்படுத்திய அதிர்வுகள் காரணமாக மாணவர்கள் பொறுமையாக இருந்து அதனை பற்றி உரையாடினார். சில மாணவர்கள் மேடைக்கு வந்து தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.


படம் வெளியாகி சரியாக ஓராண்டு கடந்திருந்தாலும் இன்று மாணவர்கள் மத்தியில் திரையிடப்பட்டதும், அவர்கள் அதனை பார்வையிட்டு கருத்துகளை பகிர்ந்து கொண்டமையும் தங்களை மேலும் உற்சாகப்படுத்தியதாகவும், இவ்வாறான நுண்ணரசியல் களங்களை உடைய படங்களை தொடர்ந்தும் வழங்குவோம் என குறித்த படத்தின் திரைக்கதையை எழுதிய பூவன் மதீசனும், படத்தை இயக்கிய ராஜ் சிவராஜ் உள்ளிட்ட படக் குழுவினர் கருத்து தெரிவித்ததோடு, படத்தை பார்வையிட்ட மாணவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர். 


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, ஊடகக் கற்கைகள் துறையின் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான பூங்குழலி சிறிசங்கீர்த்தனன், வரலாற்றுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன், சமூக செயற்பாட்டாளரும், மருத்துவருமான உதயசீலன் கற்கண்டு, குரலற்றவரின் குரல் அமைப்பை சேர்ந்த முருகையா கோமகன், காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பைச் சேர்ந்த தாய்மார்கள், தமிழின உணர்வாளர்கள், செயற்பாட்டாளர்கள் என பலரும் பங்கேற்றமை குறிப்பிடத்த

க்கது.