59 ஆவது தேசிய புத்தரிசி விழா, ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகியுள்ளது..! 09.04.2026
59 ஆவது தேசிய புத்தரிசி விழா, ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகியுள்ளது..!
09.04.2026
மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமான இந்த மாபெரும் கலாசார விழாவின் போது, விவசாயிகள் மிகுந்த பக்தியுடன் தயாரித்த தமது முதற்போக அறுவடையை புத்தபெருமானுக்கு அர்ப்பணித்தனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எமது கலாசாரத்தின் பெரும் பகுதியாக விவசாயம் பின்னிப்பிணைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
புத்தரிசி விழா அதன் உச்சகட்ட பலனாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் அடையாளமும் கலாசாரமும் இதன் மூலம் பிரதிபலிக்கின்றது என்றும் கூறினார்.
கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிப்பதே தமது நோக்கம் எனவும், அதற்காக வலுவான தொலைநோக்குப் பார்வையும் வேலைத்திட்டமும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், விவசாயிகளின் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்காகத் தெளிவான உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
