Breaking News

இன்றைய வானிலை 2026.04.14

 இன்றைய வானிலை 

2026.04.14



சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் நாவலடி, பரந்தன், முரசுமோட்டை, வெள்ளிக்கந்தல், உடபத்துக்கந்தல் மற்றும் புளியம்பொக்கனை போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.


நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் 


மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


கடல் பிராந்தியங்களில் 

**************************


கொழும்பு தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். 


நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.


இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.


சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான

மொஹமட் சாலிஹீன்.