Breaking News

வியாபாரி மூலை பகுதியில் கரை ஒதுங்கிய சடலம்..!


வியாபாரி மூலை பகுதியில் கரை ஒதுங்கிய சடலம்..!



யாழ்ப்பாணம் வடமராட்சியில் அல்வாய் வடக்கு கோயில் தோட்டத்தை சேர்ந்த 

சின்னத்தம்பி குலசிங்கம் என்பவரது சடலம் சற்றுமுன் பருத்தித்துறை வியாபாரி மூலை பகுதியில் கடற்கரையில் ஒதுங்கியுள்ளது.


சடலமாக கரை ஒதுங்கியவரை நெற்றிலிருந்து காணவில்லை என உறவுகள் தேடிக்கொண்டிருந்த நிலையில் இன்று காலை அவர்ரது சடலம் கரை ஒதுங்கியுள்ளது.


சடலம் கடலிலிருந்து கரை ஒதுங்கிய நிலையில் கிராம வாசிகளால் பருத்தித்துறை போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நெற்றிலிருந்து காணாமல் போன அல்வாய் வடக்கு கோயில் தோட்டத்தை சேர்ந்த 

சின்னத்தம்பி குலசிங்கம் என்பவரது சடலம் என அடையாளம் காட்டப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பருத்தித்துறை போலீசார் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் மேற்கொண்டு வருகின்றனர்.