மாரடைப்பு எனும் நூல் வெளியீடு
மாரடைப்பு எனும் நூல் வெளியீடு
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர்
செல்லத்துரை பிரசாத் எழுகுதிய மாரடைப்பு எனும் புத்தக வெளியீடு பருத்தித்துறை சூரிய மகால் விருந்தினர் விடுதியில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை பொது வைத்திய நிபுணர் க. சத்தியமூர்த்தி தலைமையில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.
தொடர்ந்து பஞ்ச புராணம் ஒத்தப்பட்டு வரவேற்பு நடனம் இடம்பெற்றது. வரவேற்பு உரையினை
பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை வைத்திய அதிகாரி ச.அபிநயா நிகழ்த்தியத்தை தொடர்ந்து
தலைமை உரையினை நிகழ்வின் தலைவரும் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் பொது வைத்திய நிபுணருமான க.சத்தியமூர்த்தி நிகழ்த்தினார்.
தொடர்ந்து மாரடைப்பு புத்தகத்தை எழுதிய பொது வைத்திய நிபுணர் செல்லதுரை பிராஷாத் விருந்தினர்களால் மலர் மாலை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கபட்டார். அதனை தொடர்ந்து வாழ்த்துரையினை யாழ்ப்பாணம் இந்து கல்லூரி
ஓய்வுபெற்ற பௌதிகவியல் ஆசிரியர் சொ. சோதிலிங்கம் நிகழ்த்தினார்.
நூல் வெளியீட்டுரையினை யாழ்ப்பாணம் போதானா வைத்திய சாலை பொது வைத்திய நிபுணர்
சி. சிவன்சுதன் நிகழ்த்தினார்.
தொடர்ந்து நூலின் முதல் பிரதியினை யாழ்ப்பாணம் போதானா வைத்திய சாலை பொது வைத்திய நிபுணர்
சி. சிவன்சுதன் வெளியீடு செய்து வைக்க யாழ்ப்பாணத்தின் பிரபல
பௌதிகவியல் ஆசான் குமரன் பெற்றுக்கொண்டார். மதிப்பீட்டுரையினை யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சி கலோரி அதிபர்
சி. ஜெயக்குமார் நிகழ்த்தினார். எற்புரையினை
நூலாசான் பொது வைத்திய நிபுணர் செல்லத்துரை பிரசாத் நிகழ்த்தினார்.
இவ் வெளியீட்டு நிகழ்வில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், தாதியர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள், பருத்தித்துறை நகர பிதா வின்சண்ட் டீ போல் டக்கிளஸ் போல், நகரசபை உறுப்பினர்கள், பருத்தித்துறை பிரதேச சபை உப தவிசாளர் காந்தன் மற்றும் உறுப்பினர்கள், பொது மைப்புக்களின் பிரதிநிதிகள், நலன்விரும்பிகள், பொதுமக்கள் என சுமார் 600 பேர்வரை கலந்துகொண்டனர்.
