Breaking News

கீரிமலை புனித தீர்த்தக்கரையின் புனிதத்தன்மை முழுமையாகப் பேணப்பட்டுப் பாதுகாக்கப்படும்..!

 கீரிமலை புனித தீர்த்தக்கரையின் புனிதத்தன்மை முழுமையாகப் பேணப்பட்டுப் பாதுகாக்கப்படும்..!



வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை புனித தீர்த்தக்கரையின் புனிதத்தன்மை முழுமையாகப் பேணப்பட்டுப் பாதுகாக்கப்படும் அதேவேளையில், அப்பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கீரிமலை புனித தீர்த்தக்கரையில் அமைந்துள்ள 'தண்டிகை கனகநாயக முதலியார் மட ஆதனம்' வலிகாமம் வடக்கு பிரதேச சபையிடம் 100 ஆண்டுகளுக்கு குத்தகையின் அடிப்படையில் கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (13.03.2026) காலை நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்...

.