ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்!
ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்!
1600 கி.மீ. தூரம் வரை தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணையுடன் கூடிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை ஹோர்முஸ் நீரிணை அருகே பிரிட்டன் நிலைநிறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான எச்.எம்.எஸ். ஆன்சன், தற்போது அரபிக் கடலில் உள்ளதாக அல்ஜஸீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியே அமெரிக்கா, ஈரான் மற்றும் இவற்றின் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்து, ஈரான் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்காவுக்கு ஆதரவாக நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த எச்.எம்.எஸ். ஆன்சன் நீர்மூழ்கிக் கப்பல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
