நாகர் கோவில் பிள்ளையார் ஆலயத்தில் அநாகரீக செயற்பாடுகளில் ஈடுபடும் நன்னீர் மீன்பிடி தொழிலாளிகள்....!
நாகர் கோவில் பிள்ளையார் ஆலயத்தில் அநாகரீக செயற்பாடுகளில் ஈடுபடும் நன்னீர் மீன்பிடி தொழிலாளிகள்....!
யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் தெற்கு சுடலைபிட்டி பிள்ளையார் கோவில் ஆலய வளாகத்தில் அப் பகுதியில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் தொழிலாளர்கள் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்
குறிப்பாக ஆலயத்தின் புனித தன்மையை மதிக்காமல் போதைப்பொருள் பாவனைகளில் ஈடுபடுதல் மற்றும் தமது மீன் பிடி உபகரணங்களை ஆலயத்தில் உட்புகுத்தி வைத்தல் தமது வாகனங்கள் ஆலய வளாகத்தில் நிறுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்
இவ் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் மற்றும் ஆலய புனித பூமியை அசிங்க படுத்தும் நபர்களுக்கு எதிராக ஆலய தொண்டர்கள் வன்மையாக கண்டனங்கள் தெரிவிக்கின்றனர்
