Breaking News

மாகாணமட்ட மதத் தலைவர்களை அரசாங்க பொறிமுறையுடன் இணைந்து நடாத்துதல் தொடர்பான கலந்துரையாடல்

 மாகாணமட்ட மதத் தலைவர்களை அரசாங்க பொறிமுறையுடன் இணைந்து நடாத்துதல் தொடர்பான கலந்துரையாடல்!





மாகாணமட்ட மதத் தலைவர்களை அரசாங்க பொறிமுறையுடன் இணைந்து நடாத்தும் உள்வாங்குதல், நல்லிணக்கம் மற்றும் சமூக நீதி குறித்த அனுபவப் பகிர்வு கலந்துரையாடலானது இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


சொண்ட் நிறுவனம் மற்றும் தேசிய சமாதானப் பேரவை ஆகியவற்றின் இணை அனுசரணையில் இந்த நிகழ்வானது நடைபெற்றது.


நிகழ்வின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து சொண்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் செந்தூர்ராஜாவினால் கருத்துரை வழங்கப்பட்டது.


சொண்ட் நிறுவனத்தின் நிறைவேற்று குழு பணிப்பாளர் செந்தூர்ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சர்வ மத குருக்கள், சமூகமட்ட அமைப்பினர், சொண்ட் நிறுவனத்தினர், தேசிய சமாதானப் பேரவையினர் கலந்

துகொண்டனர்.