ஆழியவளையில் கைக்குண்டு மீட்பு......!
ஆழியவளையில் கைக்குண்டு மீட்பு......!
யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் நேற்றய தினம் (21) பிற்பகல் 8:30 மணியளவில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஆழியவளை செம் மண் வீதி அருகாமையில் உள்ள சிறிய பற்றைக் காட்டுப் பகுதிக்குள் கைக்குண்டு ஒன்றினை புலனாய்வு துறையினர் பாதுகாப்பான முறையில் அகற்றி மேலதிக விசாரணைகளுக்காக மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
