Breaking News

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு

 இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு


இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இந்து சமய அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு 2026



இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அநிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக க

நிந்தவூர் பிரதேச செயலகப்பிரிவிற்கு

உட்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதேசசெயலாளர் சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லத்தீப் தலமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் ஒருங்கினைப்பினை மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் திரு கு. ஜெயராஜி

மேற்கொண்டதுடன் ஏற்பாடுகளை பிரதேச இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி சுஜிவனி பாஸ்கரன் மேற்கொண்டார்.

நிகழ்வுகளாக


தேசியகீதம் இசைத்தல்

 அறநெறி கீதம் இசைத்தல், வாக்குறுதி எடுத்தல் மற்றும் தலமையுரை, விளக்கவுரை, என்பன இடம்பெற்றதுடன் அறநெறி ஆசிரியர்களுக்கான குறிப்பேடுகளில் கையொப்பம் இடும் நிகழ்வும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில்

நிந்தவூர் பிரதேச செயலக உதவிச்செயலாளர் ரி. ஜெசான் மற்றும், கலாசார உத்தியோகத்தர்கள், பிரிவுகளுக்கான கிளைத்தலைவர்கள் மற்றும் அறநெறிபாடசாலைகளின் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.