Breaking News

வட்டு இந்துவில் கால்கோள் விழாவும் பொங்கல் விழாவும்!

 வட்டு இந்துவில் கால்கோள் விழாவும் பொங்கல் விழாவும்!





வட்டு இந்துவில் கால்கோள் விழாவும் பொங்கல் விழாவும்!


வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில், கால்கோள் விழாவும், பொங்கல் விழாவும் இன்றையதினம் நடைபெற்றது. கால்கோள் விழாவின்போது தரம் 06இல் புதிதாக இணையும் மாணவர்களை வரவேற்கும் முகமாக கால்கோள் விழா முன்னெடுக்கப்பட்டது.


இதன்போது ஆரம்பத்தில் கல்லூரியின் அதிபர் மாணவர்களுக்கு மலர்ச் செண்டுகளை வழங்கி வைத்தார். பின்னர் பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் தரம் 7இல் கல்வி கற்கும் மாணவர்கள், புதிதாக வருகை தந்த தரம் 06 மாணவர்களுக்கு மலர்ச் செண்டுகளை வழங்கி வைத்தனர்.


அதனைத் தொடர்ந்து கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிவலிங்கத்திற்கு முன்னால் பொங்கல், பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. பொங்கல் விழாவானது இந்து மாமன்றத் தலைவர் யோ.கேதீசனின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்றது.


கல்லூரியின் முதல்வர் சி.தனஞ்சயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் கல்லூரியின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி சார் ஊழியர்கள் கலந்

துகொண்டனர்.