இடர்காலத்தில் சிறந்த சேவையாற்றிய கிராம சேவகருக்கு கௌரவிப்பு!
இடர்காலத்தில் சிறந்த சேவையாற்றிய கிராம சேவகருக்கு கௌரவிப்பு!
பொன்னாலை கிராம சேவகர் சிவரூபனுக்கான கௌரவிப்பும் நத்தார் கொண்டாடட்டமும் நேற்றையதினம் மலரும் மூளாய் அபிவிருத்தி மையத்தில் நடைபெற்றது.
மலரும் மூளாய் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த கிராம சேவகர் இடர் காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் என்ற ரீதியில், மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
அதன்பின்னர் மாணவர்களுக்கு நத்தார் பரிசில்களும் வழங்கி வைக்
கப்பட்டன.
