Breaking News

செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் மிக சிறப்பாக இடம்பெற்ற யேசு கிறிஸ்து பிறப்பு விழா......!



செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் மிக சிறப்பாக இடம்பெற்ற யேசு கிறிஸ்து பிறப்பு விழா......!



வரலாற்று சிறப்புமிக்க செம்பியன் பற்று பங்கின் செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் மானிட மகனான யேசு கிறிஸ்து பிறந்த திருநாள் நேற்றைய தினம் இரவு 11:00 மணியளவில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி இரவு 11:40 மணியளவில் கிறிஸ்துமஸ் திரும்பலி ஆனது A.அந்தோனி சாமி பிரான்சிசன் கப்பூச்சியன் சபை அவர்களின் தலைமையில் இடம்பெற்றது 


இவ் திருப்பலியினை தொடர்ந்து சென் பிலிப் நேரி மறைக்கல்வி மாணவர்களால் கரோல் பாடல் இசைக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து கிறிஸ்துமஸ் பாப்பா என அழைக்கப்படும் நத்தார் பாப்பாவின் விசேட நடனம் இடம்பெற்றது 


இவ் கிறிஸ்து பிறப்பு விழாவில் அருட்தந்தை கள் அருட்சகோதரிகள் அருட்சகோதரர்கள் பொதுமக்கள் இளைஞர்கள் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் 


மற்றும் புனித பிலிப்பு நேரியார் ஆலய கிறிஸ்துமஸ் விழாவுக்கு மருதங்கேணி பொலிசார் தமது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது