Breaking News

பேதங்களை மறந்து அனைவரும் வளர்ச்சிக்காக செயலாற்றுவோம்..! பருத்தித்துறை நகரபிதா

 பேதங்களை மறந்து அனைவரும் வளர்ச்சிக்காக செயலாற்றுவோம்..!

பருத்தித்துறை நகரபிதா




எதிர்வரும் ஆண்டு சவால்களையும், வாய்ப்புகளையும் கொண்டுள்ளது. கட்சி பேதங்களை மறந்து பொதுமக்களும் இணைந்து பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்காக செயலாற்று வோம் என்று பருத்தித் துறை நகரபிதா வின் சென் டீ போல் டக்ளஸ் போல் அழைப்பு விடுத் துள்ளார்.


பருத்தித்துறை நகரசபை யின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சபையில் முன் வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவித் துததாவது


இந்த வரவு - செலவுத்திட்டமானது, வருமானமும், செலவுகளும் கொண்ட ஒரு கணக்காக அன்றி, இது எங்கள் கூட்டுத் தொலைநோக்கின் பிரதிப லிப்பாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சபையாக, பொதுமக்கள் நலனுக்குச் சேவை செய் வதே எங்களின் முதன் மையான கடமையும் பொறுப்பும் ஆகும். பொதுநிதியைப் பாதுகாப்பதோடு, 'செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாவிற்கும் மக்களுக்கு நேரடியான பய னைத் தரவேண்டும்' என் பதையும் நாம் உறுதி செய்யவேண்டும். ஒரு ஜனநாயக அமைப்பில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆனால், எங்கள் பொதுவான இலக்கு எப்போதும் பருத்தித்துறை மக்களின் நலனுக்காவும், மக்களுக்கு சேவை யாற்றுவதாகவும், இருக்க வேண்டும் என்பது எமது எண்ணம்.

அறிவும் நேர்மையும் நிறைந்த வழிகாட்டலில், தீர்க்கமான சாத்தியப்பாடு களை நோக்குவோம்-என்

றார்.