காரைநகர் பிரதேச சபையின் 2026ம் ஆண்டிற்கான பாதீடு இன்று 18.12.2025 தவிசாளர் கோவிந்தராஜனால் சமர்ப்பிக்கப்பட்டது.
காரைநகர் பிரதேச சபையின் 2026ம் ஆண்டிற்கான பாதீடு இன்று 18.12.2025 தவிசாளர் கோவிந்தராஜனால் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது பலத்த வாதப் பிரதிவாதங்களுக்குப் பின் பாதீடானது பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதன்போது பாதீட்டுக்கு ஆதரவாக 08 உறுப்பினர்களும் எதிராக 02 உறுப்பினர்களும் வாக்களித்த நிலையில் மேலதிக ஆறு வாக்குகளால் பாதீடு நிறைவேற்றப்பட்டது.
சுயேட்சை குழு உறுப்பினர்கள் இருவர், தமிழ் மக்கள் கூட்டணி உறுப்பினர்கள் இருவர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவர், இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் என. எட்டுப்பேர் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் சபைக்கு சமூகமளிக்கவில்லை என்பதுடன், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இருவரே பாதீட்டை எதிர்த்து வாக்களித்தமை குறிப்பிட
த்தக்கது.
