முறிகண்டி தென்னிந்திய திருச்சபையின் ஓய்வுநாள் பாடசாலை மாணவர்களின் ஒளிவிழா
முறிகண்டி தென்னிந்திய திருச்சபையின் ஓய்வுநாள் பாடசாலை மாணவர்களின் ஒளிவிழா
முறிகண்டி தென்னிந்திய திருச்சபையின் ஓய்வுநாள் பாடசாலை மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வு இன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில் திருச்சபை குருவாகிய வண பிதா எஸ். குகனேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவர் வண பிதா செபஸ்டியன் அன்டனி கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினராக தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீன சிரேஸ்ட ஊழியரும், செயற்குழு உறுப்பினருமான வணபிதா இ.ராஜ்குமார் மற்றும் சிரேஸ்ட ஊழியர் வணபிதா எஸ். குகனஸ்வரன், முறிகண்டி புனித பவுல் சிறுவர் அபிவிருத்தி நிலைய முகாமையாளரும் தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீன செயற்குழு உறுப்பினருமான ஞா. சப்தசங்கரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் விருத்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் நடைபெற்றது. நிகழ்வில் ஓய்வுநாள்ப் பாடசாலை மாணவர்கள், புனித பவுல் சிறுவர் அபிவிருத்தி நிலைய மாணவர்கள் உள்ளிட்ட பலரின் கலை நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றதுடன், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது, 70 வறிய மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது
