Breaking News

சமூக அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு

 சமூக அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு



பிரஜாசக்தி வறுமை ஒழிப்புக்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சமூக அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (29) முற்பகல் கரவெட்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் கலந்து கொண்டு, சமூக அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்களை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.


கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த மொத்தம் 19 பேருக்கான நியமனக் கடிதங்கள் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டன.


வறுமை ஒழிப்பு, சமூக மேம்பாடு மற்றும் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை அடித்தள மட்டத்தில் வலுப்படுத்தும் நோக்குடன் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


நிகழ்வில் பிரதேச செயலக அதிகாரிகள், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் நியமனம் பெற்ற குழுத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொ

ண்டனர்.